வாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்… நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்
புதுடெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தங்களுடைய ஆரோக்கியம் குறித்து கவலைக்கொள்ளாமல் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நெருக்கடி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் அவர்களுக்கு நமது ஆதரவை வெளிப்படுத்தும்வகையிலும், உலகிற்கு நம்முடைய ஒற்றுமையை வெளிப்படுத்தும்வகையிலும் பிரதமரின் அழைப்பை இன்றிரவு சிறப்பாக செயல்படுத்த கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றிரவு 9 மணிக்கு வீட்டின் அனைத்து விளக்குகளையும் அமர்த்திவிட்டு, கதவு மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்றுக் கொண்டு, விளக்குகள், டார்ச் லைட்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு 9 நிமிடங்களுக்கு ஒளியேற்ற பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் உலக மக்கள் அனைவரும் முடங்கியுள்ளனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழப்பு 100ஐ தொட்டுள்ளது. நாடெங்கிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் என அனைவரும் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றிரவு 9 மணிக்கு வீட்டின் விளக்குகளை அமர்த்திவிட்டு 9 நிமிடங்களுக்க விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை கொண்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்றுக் கொண்டு ஒளியேற்ற பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமரின் இந்த முயற்சிக்கு நாடெங்கிலும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்