EBM News Tamil
Leading News Portal in Tamil

அணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்

டெல்லி : இந்தியாவில் கிரிக்கெட் பயிற்சி முகாமில் பயிற்சியளித்து வரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் க்ளென் மெக்கிராத், இஷாந்த் சர்மா குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இஷாந்த் சர்மா அணியில் தன் வேலை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். தற்போது அவர் அணியில் அதிரடி பந்துவீச்சாளர் என்பதை விட ஒரு வீரராக தான் பயன்படுத்தப்படுகிறார் எனவும் கூறினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இஷாந்த் ஆரம்பத்தில் நல்ல வேகத்தில் பந்து வீசினார். ஆனால், அவர் ஒரே வேகத்தில் வீசுவதில்லை. இப்போது அவர் நல்ல அனுபவத்தோடு நல்ல கட்டுப்பாடும் கொண்டு இருக்கிறார். சூழ்நிலைகளுக்கு அவர் தன்னை மாற்றிக்கொள்வதை முதல் டெஸ்டில் தெரிந்தது” என்றார். மேலும், “இந்தியாவின் பல பிட்ச்கள் விளையாட கடினமானவை.
அனேகமாக, இஷாந்த் அதிக ஓவர்கள் பந்து வீசவில்லை. அவர் ஒரு அதிரடி பந்துவீச்சாளர் என்பதை விட ஒரு வீரராக தான் பயன்படுத்தப்படுகிறார். அவர் தனக்கு என்ன வேலை சரியாக இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
“நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் ஒரே நீளத்தில் பந்து வீசினால், வெற்றிகரமாக இருக்க முடியாது. இங்கிலாந்தில் பந்து நகர்ந்து செல்லும். இங்கே நீங்கள் முழு நீளத்தில் பந்து வீச வேண்டும். இஷாந்த்துக்கு சசக்ஸ் அணியில் ஆடிய அனுபவம் மிகவுன் நன்மை செய்துள்ளது. எனது நண்பர் ஜேசன் கில்லெஸ்பி, ஒரு பயிற்சியாளராக (சசக்ஸ் அணிக்கு) அருமையாக வேலை செய்திருக்கிறார்” எனவும் தெரிவித்தார். தனது பந்துவீச்சு அனுபவங்கள் குறித்து பேசிய மெக்கிராத், “நான் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பந்து வீசுவதை விரும்புவேன்.
ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் முன்னே வந்து சவாலை ரசிக்க வேண்டும். கோஹ்லி, தனது கிரிக்கெட் வாழ்வின் முடிவில் சச்சின், ராகுல் ஆகியோருடன் (சிறந்த பேட்ஸ்மேனாக) இணைவார்” என கூறினார். கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!