Ultimate magazine theme for WordPress.

அர்ஜென்டினா தோல்வி: ரசிகர் தற்கொலை

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டினு அலெக்ஸ். தீவிர கால்பந்து ரசிகரான டினு, அர்ஜென்டினா அணியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உலகக் கோப்பை கால்பந்தில் குரோஷியாவிடம், அர்ஜென்டினா தோல்வி கண்டது.
இதனால் விரக்தியடைந்த 30 வயதான டினு அலெக்ஸ், தங்கள் பகுதியிலுள்ள மீனாச் சாள் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். போட்டி முடிந்ததும் தொடர்ந்து மனவிரக்தியில் இருந்த டினு அலெக்ஸ் சில மணி நேரங்களில் மாயமானார். அதைத் தொடர்ந்தே அவர் ஆற்றில் குதித்த விவரம் தெரியவந்தது என்று டினு அலெக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.