EBM News Tamil
Leading News Portal in Tamil

கோலை நோக்கி 11 ஷாட்கள் ஆனால் கோலாகவில்லை: மெஸ்ஸியின் எதிர்மறை சாதனை

பெனால்டி கிக்கை கோலாக மாற்றத்தவறிய அர்ஜெண்டீன நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலவையாக வந்துள்ளன.
ஐஸ்லாந்துக்கு எதிராக பம்மிப் பம்மி ஆடி 1-1 என்று டிரா செய்தது அர்ஜெண்டினா.
முன்னாள் அர்ஜெண்டீன வீரர் ஹெர்னன் கிரெஸ்போ கூறியபோது மாரடோனா அல்ல மெஸ்ஸி, அணி வீரர்களின் ஆதரவு மெஸ்ஸிகுத் தேவை என்று மெஸ்ஸிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
மேலும் கோல் அடிக்காமலேயே 11 ஷாட் முயற்சியில் லியோனல் மெஸ்ஸி எதிர்மறைச் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் 11 முறை இலக்கை நோக்கி மெஸ்ஸி அடித்தார், ஆனால் ஒன்று கூட கோல் ஆகவில்லை.
இந்த வகையில் உலகக்கோப்பைப் போட்டியில் 10 முறை கோலை நோக்கி அடித்து ஒருமுறை கூட கோலாக்காமல் போனதில் முன்னாள் இத்தாலி வீரர் கிகி ரிவா 1974ம் ஆண்டு ஹைத்தி அணிக்கு எதிராக தன் எதிர்மறைச் சாதனையைச் செய்திருந்தார்.
தற்போது 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி இவரை முறியடித்து 11 ஷாட்கள் கோல் இல்லாமல் இலக்கை நோக்கி அடித்துள்ளார்.
மெஸ்ஸியைப் போலவே கிகி ரிவாவும் மிகச்சிறந்த வீரர், பைசைக்கிள் கிக் இன்று இப்போது புகழ்பெற்று விளங்கும் ஷாட்டை கிகி ரிவா ஆடியது இன்றளவும் கால்பந்து வர” வரலாற்றில் சிறந்த கோலாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மெஸ்ஸிக்கு ஆதரவுக் கரம் நீட்டிய முன்னாள் வீரர் கிரெஸ்போ, மெஸ்ஸி, டீகோ மாரடோனா அல்ல, தனியாக அவரால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது. பார்சிலோனா அணி அவரை எப்படி பயன்படுத்தியதோ அப்படித்தான் அர்ஜெண்டினா பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவர் திணறவே செய்வார்.
ஐஸ்லாந்துக்கு எதிராக யார் ஒழுங்காக ஆடினார்கள்? ஏஞ்செல் டி மரியா ஒருமுறை கூட எதிரணி வீரரைக் கடந்து பந்தை எடுத்துச் செல்லவில்லை. நடுக்கள வீரர்கள் மெஸ்ஸிக்கு உடன்பாடாக செயல்படவில்லை என்றார்.
வியாழனன்று குரேஷியாவுக்கு எதிராக இன்னொரு பலப்பரீட்சை காத்திருக்கிறது அர்ஜெண்டினாவுக்கு.