2018 உலகக்கோப்பைக் கால்பந்தில் விளையாடும் வயதான வீரர் யார்? சில சுவையான தகவல்கள்
நாளை மறுநாள் வியாழனன்று ரஷ்யாவில் உலகக்கோப்பைக் கால்பந்து திருவிழா தொடங்குகிறது, முதல் போட்டியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.
டெஸ்சாம்ப்ஸ், மெஸ்ஸி, முல்லர், ரொனால்டோ ஆகியோர் ரஷ்யாவில் சாதனைகளைத் துரத்துகின்றனர்.
பிரேசில், மரடோனா மற்றும் மொண்ட்ராகன் சில மைல்களை இழக்கலாம்.
இந்த உலகக்கோப்பையில் உடையக்கூடிய சில சாதனைகளைப் பார்ப்போம்:
உருகுவே, போர்ச்சுகல் அணிகள் இம்முறை ரஷ்யாவில் கால்பந்து இறுதி 16 சுற்றில் எதிர்த்து ஆடினால், உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கர் தபாரேஸ், போர்ச்சுக்கல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் ஆகியோரது கூட்டு வயது 135 ஆண்டுகள் 3 மாதங்களாகும். இது நிகழ்ந்தால் இரண்டு பயிற்சியாளர்களின் கூட்டு வயதில் இது ஒரு புதிய சாதனையாகும் தற்போது கிரீஸ் பயிற்சியாளர் ஒட்டோ ரெஹாஜெல், நைஜீரியாவின் பயிற்சியாளர் லார்ஸ் லாகர்பேக் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையில் சேர்ந்து பயிற்சியளிக்கும் போது கூட்டு வயது 133 ஆண்டுகள் 9 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உருகுவே அணிக்கு எதிராக எகிப்து அணி முதல் போட்டியில் ஆடும்போது அப்போது எகிப்து அணியில் எஸாம் எல்-ஹடாரி என்ற வீரர் ஆடினால் ஒருசாதனை, காரணம் கோல்கீப்பரான இவருக்கு வயது 45. இவர் இந்தப் போட்டியில் ஆடினால் உலகக்கோப்பை வரலாற்றில் 43 வயதில் ஆடிய ஃபாரிட் மொண்ட்ராகன் சாதனையை முறியடிப்பார்.
உலகக்கோப்பையில் 13 போட்டிகளில் தோற்காத அணி எது தெரியுமா? பிரேசில். 1954 உலகக்கோப்பையில் ஹங்கேரியிடம் 2-4 என்ற கோல்களில் தோற்றதற்குப் பிறகு 1966 உலகக்கோப்பையில் இதே ஹங்கேரி அணியிடம் குரூப் ஸ்டேட்ஜில் 1-3 என்று பிரேசில் தோற்றதற்கு இடையே 13 போட்டிகளை பிரேசில் தோற்காமல் ஆடியுள்ளது. இந்த உலகக்கோப்பை சாதனை பிரேசிலுக்குச் சொந்தமானது. அதே போல் ஜெர்மனி கடைசியாக 2010 உலகக்கோப்பை அரையிறுதியில் 1-0 என்று தோற்றபிறகு 2018 ரஷ்ய உலகக்கோப்பையை 8 போட்டிகளில் தோற்காமல் தொடங்குகிறது.
கேப்டனாக உலகக்கோப்பையில் 6 கோல்களை அடித்த சாதனை அர்ஜெண்டின நட்சத்திரம் டீகோ மரடோனாவுக்குச் சொந்தமானது. அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி இதனை முறியடிக்க 3 கோல்கள் உள்ளன.
உலகக்கோப்பைக் கால்பந்தில் 6 போட்டிகளில் தோற்காமல் இருக்கும் சாதனையை 1994, 1998 உலகக்கோப்பைகளில் மெக்சிகோ நிகழ்த்தியுள்ளது, இந்த உலகக்கோப்பையில் கோஸ்டா ரிகா 2014 பிரேசில் உலகக்கோப்பையில் 5 போட்டிகளில் தோற்காமல் இருந்தது, தற்போது செர்பியாவிடம் தோற்காமல் பிழைத்தால் அந்தச் சாதனையை கோஸ்டா ரிகா சமன் செய்யும், பிரேசிலுடன் தோற்காமல் இருந்தால் அந்தச் சாதனையை கோஸ்டா ரிகா கடக்கும்.
மூன்று உலகக்கோப்பைகளில் 5 கோல்கள் அடித்து, மிராஸ்லோவ் க்ளோஸ், பெரூ வீரர் தியோபிலோ கியூபிலாஸ் ஆகியோரது 4 கோல்கள் சாதனையை ஜெர்மனியின் தாமஸ் முல்லர் கடக்க வாய்ப்பு. ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் க்ளோஸ் உலகக்கோப்பைப் போட்டிகளில் 16 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார் தாமஸ் முல்லர் 10 கோல்களை இதுவரை அடித்துள்ளார்.
உலகக்கோப்பையை வீரராகவும் பயிற்சியாளராகவும் வெல்வதில் பிரான்ஸ் பயிற்சியாளர் திதியர் டெஸ்சாம்ப்ஸ் இருமுறை சாதனை செய்துள்ளார், இம்முறை பயிற்சியாளராக பிரான்ஸை கோப்பையை வெல்லச் செய்துவிட்டால் மரியோ ஸகல்லோ, பிரான்ஸ் பெக்கன்பாயர் ஆகியோருடன் டெஸ்சாம்ப்ஸ் இணைவார்.