உலகக் கோப்பை கால்பந்து 2018: 1998-சாம்பியன் பிரான்ஸ்
16-ஆவது உலகக் கோப்பை பிரான்ஸ் நாட்டில் 10 நகரங்களில் நடைபெற்றது. 1938-க்கு பின் இரண்டாவது முறையாக போட்டிகள் பிரான்ஸில் நடைபெற்றன. இதில் தான் 24 அணிகள் எண்ணிக்கை 32 அணிகளாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் தான் முதன்முறையாக நான்காவது நடுவர் மின்னணு பலகைகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும் முதன்முறையாக கோல்டன் கோல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வீரரின் பின்னால் இருந்து பந்தை பறிக்க முயல்வது தடை செய்யப்பட்டது. முதல் அரையிறுதியில் பிரேசில் 4-2 என பெனால்டி வாய்ப்பில் நெதர்லாந்தையும், இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என குரோஷியாவையும் வீழ்த்தின.
இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 3-0 என பிரேசிலை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் ஆனது. அந்த அணியின் ஜிடேன் ஜீனடேனின் அற்புதமான ஆட்டத்தால் பிரான்ஸ் பட்டம் வென்றது.
மொத்த ஆட்டங்கள்: 64, கோல்கள்: 171, பார்வையாளர்கள்; 27,84,687, அதிக கோலடித்தவர்; டேவிட் சக்கர் (குரோஷியா).
நட்பு ஆட்டங்கள்
பிரான்ஸ்-அமெரிக்கா: 1-1
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு பல்வேறு அணிகளின் நட்பு ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான நட்பு ஆட்டம் லியானில் நடைபெற்றது. பிரான்ஸின் நட்சத்திர வீரர் பால் போக்பா சிறப்பாக விளையாடினாலும் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அமெரிக்க வீரர் ஜூலியன் கிரீன் முதலில் கோலடித்தார். இரண்டாவது பாதியில் பிரான்ஸின் கிளியன் மாப்பே அடித்த கோல் மூலம் ஆட்டம் டிராவில் முடிந்தது.
வரும் 16-ஆம் தேதி பிரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ஆஸி.யை எதிர்கொள்கிறது.
ஸ்பெயின்-துனிசியா: 1-0
2010 சாம்பியன் ஸ்பெயின்-துனிசியா அணிகள் இடையிலான நட்பு ஆட்டம் கிராஸ்நோடர் நகரில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியின் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லாத நிலையில் ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் இருக்கையில் அந்த அணி வீரர் லாகோ அஸ்பாஸ் அடித்த ஓரே கோலால் ஸ்பெயின் வென்றது. வரும் 15-ஆம் தேதி ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகலை தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் எதிர்கொள்கிறது. துனிசியா 18-ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
டென்மார்க்- மெக்ஸிகோ: 2-0
புடாபெஸ்டில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரி 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. டலின்னில் நடந்த ஆட்டத்தில் மொராக்கோ 3-1 என்ற கோல் கணக்கில் எஸ்டோனியாவையும், கிராஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் செர்பியா 5-1 என பொலிவியாவையும், பிரான்ட்பையில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க் 2-0 என மெக்ஸிகோவையும் வீழ்த்தின.கோதன்பர்க்கில் நடந்த ஸ்வீடன்-பெரு அணிகள் இடையிலான ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.
கொலம்பியா
கடந்த 2014 உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி பெற்ற கொலம்பியா. தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆனால் தகுதி பெறுவதற்கு
கடுமையாக சிரமப்பப்பட்ட கொலம்பியா கடைசி ஆட்டத்தில் தான் வென்று தகுதி பெற முடிந்தது.
நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்:
கடந்த உலகக் கோப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரோட்ரிக்ஸ், உருகுவேக்கு எதிரான சைக்கிள் கிக் மூலம் அடித்த கோல் இதுவரை பேசப்பட்டு வருகிறது.
தற்போது பேயர்ன் முனிக் அணியில் விளையாடி வருகிறார்.
பயிற்சியாளர் ஜோஸ் பெக்கர்மேன்:
ஆர்ஜென்டீனா அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறப்பாக செயல்பட்ட பெக்கர்மேன் கொலம்பியா மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
போலந்து
கடந்த 2006-ஆம் உலகக் கோப்பைக்கு பின் முதன்முறையாக போலந்து நாட்டு ரசிகர்கள் அதிகளவில் ரஷியாவுக்கு பயணிக்கின்றனர். அந்த அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களான ராபர்ட் லெவன்டோஸ்கி, ஜேகுப் பிளாஸிகோவ்ஸ்கி ஆகியோர் இந்த உலகக் கோப்பையுடன் விடை பெறும் வாய்ப்பும் உள்ளது.
கடந்த 2016 யூரோ சாம்பியன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய போலந்து அணி பெனால்டி வாய்ப்பில் போர்ச்சுகலிலும் தோல்வியுற்றது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் 4-0 என்ற கோல்கணக்கில் டென்மார்க்கிடம் படுதோல்வி அடைந்தது அந்த அணி நிர்வாகத்தை கவலைக்குள்ளாகி உள்ளது.
நட்சத்திர வீரர் ராபர்ட் லெவன்டோஸ்கி:
போலந்தின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரரான ராபர்ட் அதிக கோலடித்த வீரராகவும் உள்ளார்.
தகுதி ஆட்டங்களில் அவர் மொத்தம் 16 கோல்களை அடித்து சாதனை புரிந்தார்.
பயிற்சியாளர் ஆடம் நவால்கா:
போலந்து அணியை தாக்குதல் ஆட்ட முûறையில் இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக நவால்கா உருவாக்கி உள்ளார்.
செனகல்
கடந்த 2002-இல் நடப்புச் சாம்பியனாக திகழ்ந்த பிரான்ûஸ வீழ்த்தி காலிறுதிக்கு செனகல் அணி தகுதி பெற்றது. அதன் பின் வந்த உலகக் கோப்பை போட்டியில் செனகல் சோபிக்கவில்லை. தற்போது முதன்முறையாக அந்த அணி தகுதி பெற்றுள்ளது.
தகுதி ஆட்டம் மூலம் தேர்வாகாமல் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதால், தென் ஆப்பிரிக்காவிட் 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் தோல்வியைத் தழுவிய போட்டியை மீண்டும் நடத்த பிஃபா உத்தரவிட்டது. அதன்படி பின் நடந்த ஆட்டத்தில் செனகல் வென்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
நட்சத்திர வீரர் சாடியோ மேன்: லிவர்பூல் அணியில் விளையாடி வரும் சாடியோ மேன் சிறந்த துடிப்பான வீரராக செயல்படுகிறார். செனகல் அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக உள்ளார்.
பயிற்சியாளர் அலியு சிசெ: கடந்த 2002 உலகக் கோப்பையில் செனகல் அணியின் கேப்டனாக இருந்த அலியு சிசி தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான்
இதர கால்பந்து ஜாம்பவான் அணிகளுக்கு இருக்கும் நட்சத்திர வீரர்கள் பலம், ஜப்பானுக்கு இல்லையென்றாலும், ஐரோப்பாவில் விளையாடிய அனுபவம் பெற்ற பல்வேறு வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். ஷின்ஷி ககாவா, ஷின்ஜி ஓகாசகி ஆகியோர் அணியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
நட்சத்திர வீரர் ஷின்ஷி ககாவா:
89 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ககாவா நடுக்களத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். தற்காப்பில் இவருடன் யுடோ நாகமுட்டோ, கீய்சுக் ஹோண்டா ஆகியோர் சிறப்பாக இணைந்து ஆடுகின்றனர்.
பயிற்சியாளர் வாஹித் ஹலில்ஹோடிக்:
போஸ்னியாவைச் சேர்ந்த வாஹித் கடந்த 2014 போட்டியில் அல்ஜீரிய அணியை முதன்முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறச் செய்தார். அதே போல் ஜப்பான் அணிக்கும் தீவிர பயிற்சி அளித்துள்ளார்.