EBM News Tamil
Leading News Portal in Tamil

டேவிட் வில்லா சாதனையை முறியடித்த செஞ்சுரி ’ஹீரோ’ சுனில் சேத்ரி!

மும்பை: கென்யா அணிக்கு எதிரான இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரின் லீக் போட்டியில், இரண்டு கோல் அடித்த செஞ்சுரி நாயகன் சுனில் சேத்ரி, ஸ்பெயினின் டேவிட் வில்லாவின் சர்வதேச சாதனையை முறியடித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, முதல் முறையாக நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரை முதல் முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிட்டு அறிவித்தது.
மூன்று கண்டங்கள்:
இதில் தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக தகுதி பெற்றது. தவிர பிபா உறுப்பினர்களான சீன தைபே, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கிறது.
செஞ்சுரி சேத்ரி:
இந்நிலையில் மும்பையில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, கென்யா அணியை எதிர்கொண்டது. இது இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இதற்காக போட்டி துவங்கும் முன், இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் மரியாதை அளித்தனர்.
இரட்டை அடி:
இப்போட்டியில் கேப்டன் சுனில் சேத்ரி (68, 90+2வது நிமிடம்) இரண்டு கோல் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த தற்போதைய கால்பந்து வீரர்கள் பட்டியலில், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை (59 கோல்கள்) பின்னுக்கு தள்ளி சுனில் சேத்ரி (61 கோல்கள்) மூன்றாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (81 கோல்கள்), அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி (64 கோல்கள்) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.