EBM News Tamil
Leading News Portal in Tamil

செஞ்சுரியில் சுளுக்கெடுத்த சுனில் சேத்ரி: கென்யாவை வீழ்த்தியது இந்தியா!

மும்பை: கென்யா அணிக்கு எதிரான இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரின் லீக் போட்டியில், செஞ்சுரி நாயகன் சுனில் சேத்ரி அசத்த, 3-0 என்ற கோல் கணத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, முதல் முறையாக நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரை முதல் முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிட்டு அறிவித்தது.
மூன்று கண்டங்கள்:
இதில் தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக தகுதி பெற்றது. தவிர பிபா உறுப்பினர்களான சீன தைபே, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கிறது.
செஞ்சுரி சேத்ரி:
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இதற்காக போட்டி துவங்கும் முன், இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் மரியாதை அளித்தனர்.
மழை குறுக்க்கீடு:
இந்நிலையில் மும்பையில் கடும் மழை பெய்ததால், போட்டியின் முதல் பாதியில் பந்தை பாஸ் செய்ய இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். ஆனால் பலத்த மழை பெய்ததால், மைதாத்தில் அதிக தண்ணீர் தேங்கி, பந்தை பாஸ் செய்வது கடினமாக இருந்தது.
அடுத்ததடுத்த அடி….
இதையடுத்து முதல் பாதி போட்டி இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என சமநிலை வகித்தது. இதையடுத்து பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் ரசிகர்கள் உற்சாகத்தோடு களமிறங்கிய இந்திய அணியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.


இந்நிலையில் போட்டியின் இரண்டாவது பாதியின் 68வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, கேப்டன் சுனில் சேத்ரி கோலாக மாற்ற, இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. பின் அடுத்த சில நிமிடங்களில் (71வது நிமிடம்) இந்திய வீரர் ஜீஜீ மற்றொரு கோல் அடிக்க, இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது.
தொடர்ந்து கேப்டன் சுனில் சேத்ரி கூடுதல் நேரத்தில் (90+2வது நிமிடம்) மற்றொரு கோல் அடித்தார். இதற்கு கடைசி வரை போராடிய கென்ய அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில், இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதையடுத்து பங்கேற்ற இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.