EBM News Tamil
Leading News Portal in Tamil

செஞ்சுரி கேப்டன் சுனில் சேத்ரிக்கு ‘ராஜ’ மரியாதை!

மும்பை: தனது 100வது சர்வதேச கால்பந்து போட்டியில் களமிறங்கிய இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, முதல் முறையாக நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரை முதல் முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிட்டு அறிவித்தது.
மூன்று கண்டங்கள்:
இத்தொடரில் தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக தகுதி பெற்றது. தவிர, பிபா ஆசிய உறுப்பினர் என்ற அடிப்படையில் சீன தைபே, ஓசினியா உறுப்பினர் என்ற அடிப்படையில் நியூசிலாந்து, ஆப்ரிக்க உறுப்பினர் என்ற அடிப்படையில் தென் ஆப்ரிக்கா அணிகள் இதில் பங்கேற்கிறது.
ஆர்வம் குறைவு:
இத்தொடரின் போட்டிகள் அணைத்தும் மும்பையில் நடக்கிறது. இந்திய அணி கடந்த 1ம் தேதி பங்கேற்ற முதல் லீக் போட்டியில் சீன தைபே அணியை 5-0 என வீழ்த்தியது. ஆனால் இந்த போட்டியை வெறும் 2000 பேர் மட்டுமே நேரில் கண்டு ரசித்தனர்.
நிரம்பிய மைதானம்:
இதற்காக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கிரிக்கெட்டைப்போல இந்திய கால்பந்து அணிக்கும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்ள, நாடு முழுதும் அவருக்கு ஆதரவு கூடியது. இதற்காக இன்றைய கென்ய அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது.


செஞ்சுரி சேத்ரி:
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இதற்காக போட்டி துவங்கும் முன், இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் மரியாதை அளித்தனர்.