SeePics: சானியா மிர்ஷா-வின் பிட்னஸ் சேலன்ஜ் புகைப்படங்கள்!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா மற்றும் மாலிக் தம்பதியருக்கு விரைவில் வாரிசு பிறக்கவுள்ள நிலையில் தற்போது சானியா தான் உடற்பறிச்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்!
திருமணமாக 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சானியா மிர்ஷா கருவுற்று இருப்பதாக முன்னதா தனது ட்விட்டர் வாயிலாக சானியா தெரிவித்தார். இதனையடுத்து தனது கணவருடன் பிறக்கவுள்ள குழந்தையின் நலன் வேண்டி புனித யாத்திரை சென்றார்.
தற்போது விளையாட்டு வீரர்கள் உள்பட பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி சவால் விடப்பட்டு, அதனை நிறுபிக்கும் வகையில் சமீபத்தில் கோலி, ஹிர்திக் ரோஷன் உள்பட பலரும் தங்களது உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சானியா மிர்ஷாவும், கர்பக்காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம் என்பதினை குறிக்கும் வகையில் தற்போது தனது உடற்பயிற்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சானியா தற்போது துபாயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கற்ப காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது!