‘இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்கலாம்’ – மைக்கேல் வான் | team india can appoint shubman gill as vice captain in test michael vaughan
எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அது குறித்து தனது கருத்தை முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் வான் பகிர்ந்துள்ளார்.
“ஷுப்மன் கில் இப்போதைக்கு கேப்டன் வீரர் அல்ல. ஆகவே அவரை துணைக் கேப்டனாக நியமிக்கலாம்” என்று மைக்கேல் வான் பரிந்துரைத்துள்ளார். அவர் தன் எக்ஸ் தள பதிவில், “இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பு என்னிடம் இருந்தால் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக இருக்கலாம் என்று கருதுவேன்” என கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக அந்த ட்வீட்டில் கோலியை அவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, “எனக்கு ஆட்டம் மீது தூய்மையான நேயம் இருந்தால் தொடர்வதில் பிரச்சினையில்லை. அப்படி இல்லையெனில் நான் எனக்கு நானே நேர்மையாக இருக்க வேண்டும்” என்று கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் யார்? – இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியை ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் பொறுப்பு வழங்காத பட்சத்தில் பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோரை பிசிசிஐ முயற்சிக்கலாம். ஸ்ரேயஸ் ஐயரும் கேப்டன் பொறுப்புக்கு சிறந்த சாய்ஸாக இருப்பார்.