EBM News Tamil
Leading News Portal in Tamil

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற கோலி விருப்பம் – சிக்கலில் இந்திய அணி? | team india batsman virat kohli wish to retire from test cricket informed bcci sources


மும்பை: இந்​திய கிரிக்​கெட் அணி வரும் ஜூன் மாத தொடக்​கத்​தில் இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் 2025-27-ம் ஆண்டு சுழற்​சி​யில் இந்​தி​யா​வுக்கு முதல் தொட​ராக அமைய உள்​ளது.

இந்​தத் தொடருக்​கான இந்​திய அணி வீரர்​கள் தேர்வு வரும் 25-ம் தேதி நடை​பெறக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கிடையே கடந்த சில தினங்​களுக்கு முன்​னர் 37 வயதான இந்​திய அணி​யின் கேப்​ட​னான ரோஹித் சர்​மா, சர்​வ​தேச டெஸ்ட் போட்​டி​யில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​திருந்​தார். இந்த அதிர்ச்சி ஓய்​வதற்​குள் 36 வயதான நட்​சத்​திர வீர​ரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஓய்வு பெற விரும்​புவ​தாக பிசிசிஐ-​யிடம் தெரி​வித்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இங்​கிலாந்து டெஸ்ட் தொடர் முக்​கி​யம் என்​ப​தால் அணி தேர்​வுக்கு முன்​ன​தாக பிசிசிஐ தரப்​பில் இருந்து விராட் கோலி​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படக்​கூடும் என கருதப்​படு​கிறது. விராட் கோலி தனது எண்​ணத்தை மாற்​றிக்​கொள்​ள​வில்லை என்​றால், அவர் 14 ஆண்​டு​கால தனது புகழ்​பெற்ற டெஸ்ட் கிரிக்​கெட் வாழ்க்​கையை முடித்​துக்​கொள்​வார். அவர், 123 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 46.85 சராசரி​யுடன் 9,230 ரன்​கள் குவித்​துள்​ளார். 68 போட்​டிகளுக்கு கேப்​ட​னாக​வும் இருந்​துள்​ளார். 30 சதங்​கள், 31 அரை சதங்​கள் விளாசி​யுள்​ளார்.

ரோஹித் சர்மா ஓய்வு பெற்​று​விட்ட நிலை​யில், புதிய கேப்​டன் தலை​மை​யில் இந்​திய அணி இங்​கிலாந்து டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. அநேக​மாக ஷுப்​மன் கில் புதிய கேப்​ட​னாக நியமிக்​கப்​படக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தற்​போது அனுபவம் வாய்ந்த விராட் கோலி​யும் ஓய்வு பெற விரும்​புவ​தாக தெரி​வித்​துள்​ளது அணி நிர்​வாகத்​தை​யும், தேர்​வுக்​குழு​வினரை​யும் அதிர்ச்சி அடைய வைத்​துள்​ளது.

கடந்த ஆண்டு டி20 உலகக்​கோப்பை தொடரை வென்ற உடன் ரோஹித் சர்​மாவுடன் இணைந்து விராட் கோலி​யும் சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​திருந்​தார். தற்​போது டெஸ்ட் போட்​டி​யிலும் ரோஹித் சர்​மாவை தொடர்ந்து விராட் கோலி​யும் விடை​பெற விரும்​புவ​தால் இங்​கிலாந்து டெஸ்ட் தொடரை இளம் வீரர்​களை கொண்டே இந்​திய அணி அணுகக்​கூடும்.

ஏற்​கெனவே ரவிச்​சந்​திரன் அஸ்​வினும் ஓய்வு பெற்​று​விட்​டார். சேதேஷ்வர் புஜா​ரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் கடந்த சில ஆண்​டு​களாகவே தேர்வு செய்​யப்​படு​வ​தில்​லை. ரஹானே கடைசி​யாக 2023-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடி​யிருந்​தார். அதேவேளை​யில் புஜாரா அதே ஆண்​டில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான தொடரில் களமிறங்​கி​யிருந்​தார்.

காயத்​தில் இருந்து மீண்டு சுமார் 14 மாதங்​களுக்​குப் பிறகு விளை​யாடத் தொடங்கி உள்ள முகமது ஷமி டெஸ்ட் கிரிக்​கெட் விளை​யாடு​வதற்​கான உடற்​தகு​தி​யுடன் இருக்​கிறாரா என்​பது சந்​தேக​மாகவே உள்​ளது. தற்​போதைய சூழ்​நிலை​யில் கே.எல்​.​ ராகுல், ரவீந்​திர ஜடேஜா, ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோர் மட்​டுமே அனுபவ வீரர்​களாக உள்​ளனர். ஒரு​வேளை வி​ராட் கோலி இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் விளை​யா​டா​விட்​டால் இந்​தத்​ தொடர்​ இந்​தி​ய அணிக்​கு கூடு​தல்​ ச​வாலாக இருக்​கும்​.