EBM News Tamil
Leading News Portal in Tamil

தைபே ஓபன் பாட்மிண்டன்: ஆயுஷ், உனதி தோல்வி | Taipei Open Badminton Ayush shetty Unnati hooda lose in semi finals


தைபே: தைபே ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் அரை சுற்​றில் இந்​தி​யா​வின் இளம் நட்​சத்​திரங்​களான ஆயுஷ் ஷெட்​டி, உனதி ஹூடோ தோல்வி அடைந்​தனர்.

தைபே​வில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 44-வது இடத்​தில் உள்ள இந்தியா​வின் இளம் வீர​ரான ஆயுஷ் ஷெட்​டி, 7-வது இடத்​தில் உள்ள தைவானின் சோ டியேன் சென்​னுடன் மோதி​னார். இதில் ஆயுஷ் ஷெட்டி 18-21, 17-21 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் உனதி ஹூடா, உலகத் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள டொமோக்கா மியசாகியை எதிர்​கொண்​டார். இதில் உனதி ஹூடா 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்​கில் வீழ்ந்​தார்​.