EBM News Tamil
Leading News Portal in Tamil

ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப்: அனஹத், அபய் சிங் வெற்றி! | Anahat and Abhay Singh win Squash World Championship


சிகாகோ: அமெரிக்​கா​வின் சிகாகோ நகரில் ஸ்கு​வாஷ் உலக சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் உலகத் தரவரிசை​யில் 62-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், 28-வது இடத்​தில் உள்ள அமெரிக்காவின் மரினா ஸ்டெ​பானொனி​யுடன் மோதி​னார். இதில் அனஹத் சிங் 10-12, 11-9, 6-11, 11-6, 11-6 என்ற கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 15-வது இடத்​தில் உள்ள எகிப்​தின் ஃபைரூஸ் அபோஎல்​கையருடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார் அனஹத் சிங். ஃபைரூஸ் அபோஎல்​கையர் தனது முதல் சுற்​றில் சகநாட்​டைச் சேர்ந்த ஹனா மோட்​டாஸை 3-1 என்ற கணக்​கில் வீழ்த்​தி​னார்.

ஆடவர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 38-வது இடத்​தில் இந்​தி​யா​வின் அபய் சிங், 25-ம் நிலை வீர​ரான சுவிட்​சர்​லாந்​தின் நிக்​கோலஸ் முல்​லருடன் மோதி​னார்.

இதில் அபய் சிங் 11-7, 2-11, 11-7, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். 2-வது சுற்​றில் அபய் சிங், 13-ம் நிலை வீர​ரான எகிப்​தின் யூசுப் இப்ராகிமுடன்​ மோதுகிறார்​.