உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு | Sachin Tendulkar welcomes Operation Sindoor
ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது:
ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம். அதேபோல் வலிமையில் எல்லையற்றதாக இருக்கிறோம். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். ஒற்றுமைக்கான செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும்போது இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் ஒரே அணி. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் ஹேஷ்டாக்கையும் இணைத்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், ஷிகர் தவான், யூசுப் பதான், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், செஸ் வீரர் விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.