EBM News Tamil
Leading News Portal in Tamil

மழையால் போட்டி தாமதம்: குஜராத் அணி த்ரில் வெற்றி! | GT vs MI | MI vs GT Highlights, IPL 2025: Gujarat Titans beat Mumbai Indians


ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.

இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன் 2 ரன்களுடன், ரோஹித் 7 ரன்களுடனுன் வெளியேறினர். வில் ஜாக்ஸ் அரை சதத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவ் 35, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 1, கார்பின் போஷ் 27, தீபக் சஹர் 8 என 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

இதன் பிறகு 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி. எனினும் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே வான்கடே மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது.

பின்னர் மீண்டும் மழை விடாமல் பெய்யத் தொடங்கியதால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. 147 ரன்கல் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயம் செய்யப்பட்டது. சாய் சுதர்ஷன் 5, ஷுப்மன் கில் 43, ஜாஸ் பட்லர் 30, ரூதர்ஃபோர்ட் 28, ஷாருக்கான் 6, டிவாட்டியா 11 என 19 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.