EBM News Tamil
Leading News Portal in Tamil

“என் பேட்டிங்குக்கு புத்துயிர் கொடுத்தவர் ராகுல் திராவிட்” – கெவின் பீட்டர்சன் மலரும் நினைவுகள் | Rahul Dravid the one who made my batting to survive spin Kevin Pietersen shares


2012-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்ததில் இருந்து வீரராகவும் ஆலோசகராகவும் பயிற்றுனராகவும் பயிற்சியாளராகவும் டெல்லி அணியின் தூணாகச் செயல்பட்டு வருபவர் கெவின் பீட்டர்சன்.

“ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் சிறந்த வெற்றி கண்ட தருணம் விரேந்திர சேவாக் தலைமையில் ஆடும்போதுதான். அன்றிலிருந்து நான் வர்ணனையாளராக ஆனாலும் டெல்லியே என் அணி என்று முடிவெடுத்து விட்டேன்” என்று பெருமை பொங்க நினைவுகூர்கிறார் கெவின் பீட்டர்சன். 2012-ல் குரூப் ஸ்டேஜில் டாப் இடத்தை டெல்லி டேர்டெவில்ஸ் எட்டிய போது கெவின் பீட்டர்சன் தன் முதல் டி20 சதத்தை அடித்திருந்தார்.

டெல்லி அணியின் தேர்வுகளில் தலையிடாவிட்டாலும் டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டர்களைத் தயார் செய்வதில் கெவின் பீட்டர்சனின் பங்கு மிக மிக அதிகம். அபிஷேக் போரெல் என்ற பேட்டருக்கு ஷாட்களின் ரேஞ்ச்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அஷுதோஷ் சர்மா என்பவர் லக்னோவுக்கு எதிராக தனியாளாக நின்று 66 ரன்களில் டெல்லிக்கு வெற்றி பெற்றுத் தந்த போது அவரது குருநாதர் கெவின் பீட்டர்சனின் புகழ்பெற்ற ‘ஸ்விட்ச் ஹிட்’ ஷாட்டை ஆடி பீட்டர்சனை புளகாங்கிதப்படுத்தினார்.

கெவின் பீட்டர்சன் ஐபிஎல் ஆடியக் காலக்கட்டத்தில் இங்கிலாந்து ஊடகங்கள், முன்னாள் வீரர்கள், மக்கள் என்று பலரும் இவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். “இந்தியாதான் கிரிக்கெட்டை நடத்துகிறது என்று நினைக்காதவர்கள் மடையர்கள்தான். எல்லா முடிவுகளையும் பிசிசிஐதான் எடுக்கிறது. இந்திய கிரிக்கெட் இல்லாமல் நாங்களெல்லாம் இங்கு ஏது? எங்கே இருந்திருப்போம்? கவுண்டி கிரிக்கெட்டை கவர் செய்து கொண்டிருப்போம்.” என கெவின் பீட்டர்சன் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஆடியதற்கான காரணத்தை ‘பணம்’ என்பதாகவேக் கண்டு சாடிக்கொண்டிருந்தது. ஆனால் தன் கிரிக்கெட் பேட்டிங்கையே மாற்றியதில் ஐபிஎல் பெரும் பங்கு வகித்ததாகக் கெவின் பீட்டர்சன் கருதுகிறார்.

“ஐபிஎல் என் கிரிக்கெட் வாழ்க்கையைக் காப்பாற்றியது என்றால் அது மிகையான கூற்றல்ல. அதாவது ராகுல் திராவிட் மட்டும் இல்லையென்றால் என் கிரிக்கெட் வாழ்வு முடிந்திருக்கும். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவில் ராகுல் திராவிட் எனக்கு சில பல அறிவுரைகளை வழங்கியிருக்காவிட்டால் என் கரியர் அவுட் ஆகியிருக்கும்.

ஸ்பின் பவுலிங்கை நான் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆட முடியவில்லை. 3-ம் நடுவரைக் கேட்கும் டிஆர்எஸ் முறை என்னை அழித்துக் கொண்டிருந்தது. அப்போது என் ஆட்டத்திற்கு புத்துயிர் அளித்தவர் ராகுல் திராவிட் தான்.” என்றார் கெவின் பீட்டர்சன்.

ராகுல் திராவிட் கொடுத்த டிப்ஸின் அடிப்படையில்தான் இங்கிலாந்தில் ஜோ ரூட் கெவின் பீட்டர்சனின் பார்வையில் சிறந்த ஸ்பின் ஆடும் வீரராக உருவெடுத்தார். ஜான் பேர்ஸ்டோவும் அப்படித்தான். இப்போது ஹாரி புரூக், கெவின் பீட்டர்சன் கைவண்ணத்தில் உருவானவர்கள். ஆனால் பெயர் என்னவோ ‘பாஸ்பால்’ என்று மெக்கல்லமுக்குப் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரை மதிக்கவில்லை மாறாக இவரை அவமரியாதையாகவே நடத்தியது என்றால் மிகையாகாது.