EBM News Tamil
Leading News Portal in Tamil

சிஎஸ்கே அணியில் உர்வில் படேல் சேர்ப்பு | Urvil Patel added to CSK squad ipl 2025


சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

26 வயதான உர்வில் படேல் 2024-25-ம் ஆண்டு சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் குஜராத் அணிக்காக களமிங்கி திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். சமீபத்தில் அவரை சிஎஸ்கே அணி தேர்வுக்கு அழைத்து அவரது பேட்டிங்கை பரிசோதித்து இருந்தது. இந்நிலையில் தற்போது அவரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (7-ம் தேதி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறகிறது.