EBM News Tamil
Leading News Portal in Tamil

மழையால் ஆட்டம் ரத்து: ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது ஹைதராபாத் | DC vs SRH | SRH vs DC Highlights , IPL 2025: Match abandoned due to wet outfield


நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஹைதராபாத் அணி.

ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கருண் நாயர், டுப்ளெஸிஸ் இருவரும் ஓப்பனிங் ஆடினர்.

இதில் கருண் நாயர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். டுப்ளெஸிஸ் 3 ரன்களுடன் நடையை கட்டினார். அபிஷேக் பொரெல் 8, கே.எல்.ராகுல் 10, அக்சர் படேல் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41, விப்ராஜ் நிகாம் 18, அஷுடோஷ் சர்மா 41, மிட்சல் ஸ்டார்க் 1 என 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி அணி.

ஆனால் அதன் பிறகு மழை தொடங்கியதால் ஆட்டம் தாமதம் ஆனது. பின்னல் மழை தொடர்ந்து விடாமல் பெய்து வந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. இந்த போட்டி ரத்தானதன் மூலம் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.