EBM News Tamil
Leading News Portal in Tamil

வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி கேப்பிடல்ஸ்? – இன்று ஹைதராபாத் அணியுடன் மோதல் | does Delhi Capitals return to winning ways to play srh today ipl 2025


ஹைதராபாத்: ஐபிஎல் சீசனின் 55-வது லீக் போட்​டி​யில் இன்று டெல்லி கேப்​பிடல்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன.

ஹைத​ரா​பாத்​தி​லுள்ள ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. டெல்லி அணி இது​வரை 10 போட்​டிகளில் விளை​யாடி 6 வெற்​றி, 4 தோல்வி​களைப் பெற்று 12 புள்​ளி​களைச் சேர்த்​துள்​ளது. அந்த அணி வெற்​றிப் பாதைக்​குத் திரும்ப வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது.

அந்த அணி​யின் அபிஷேக் போரல், டூ பிளெஸ்​ஸிஸ், கருண் நாயர், கே.எல்​.​ராகுல், அக்​சர் படேல், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், விப்​ராஜ் நிகம் ஆகியோர் பேட்​டிங்​கில் பலம் சேர்க்​கின்​றனர். அதே​போல் பந்​து​வீச்​சில் ஸ்டார்க், சமீ​ரா, முகேஷ் குமார், அக்​சர் படேல், குல்தீப் யாதவ் சிறப்​பாக பந்​து​வீசி​னால் மட்​டுமே வெற்றி வசப்படும்.

அதே​நேரத்​தில் ஹைத​ரா​பாத் அணி 10 ஆட்​டங்​களில் பங்​கேற்று 3 வெற்​றி, 7 தோல்வி​களைப் பெற்று 6 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. ஹைத​ரா​பாத் அணி​யின் பேட்​டிங் வரிசை டிரா​விஸ் ஹெட், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷான், ஹென்​ரிச் கிளாசன், அனிக்​கெட் வர்​மா, நித்​திஷ் குமார் ரெட்​டி, கமிந்து மெண்​டிஸ் என வலு​வாக உள்​ளது. எனவே, டெல்லி பந்​து​வீச்​சாளர்​களுக்கு இவர்​கள் கடும் நெருக்​கடி தரு​வார்​கள் என்​ப​தில் சந்​தேகமில்​லை.

அதே​போல் பந்​து​வீச்​சில் முகமது ஷமி, ஜெயதேவ் உனத்​கட், பாட் கம்​மின்​ஸ், ஹர்​ஷல் படேல், ஜீஷன் அன்​சா​ரி, கமிந்து மெண்​டிஸ் ஆகியோர் உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்​தக்​ காத்​திருக்​கின்​றனர்​.