மகளிர் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி | indian women hockey team beats australia in perth
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ, ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கெதிரான ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று பெர்த்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் நவ்நீத் கவுர் 21-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.