யு-19 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு: சென்னையை சேர்ந்தவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் | U19 cricketers selection Chennai residents can apply from today
சென்னை: டிஎன்சிஏ சார்பில் சிட்டி யு-19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள ‘பி’ கிரவுண்டில் நடைபெறுகிகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 1, 2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ மற்றும் 31 ஆகஸ்ட் 2009 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னையில் வசிக்கும் மற்றும் முகவரி சான்று உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னையை சேர்ந்த வீரர்கள் TNCA இணையதளம் (www.tnca.in) சென்று இன்று (4-ம் தேதி) காலை 10 மணி முதல் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். வீரர்களின் விவரங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் அவர்களுக்கான தேர்வு தேதி மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
இத்தகவலை டிஎன்சிஏ செயலாளர் ஆர்.ஜ.பழனி தெரிவித்துள்ளார்.