EBM News Tamil
Leading News Portal in Tamil

ரிஷப் பந்த்துக்கு ரூ.24 லட்சம் அபராதம் | rupees 24 lakhs penalty for lsg captain rishabh pant


மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

அதேவேளையில் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து தலா ரூ.6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை கட்ட வேண்டும்.