EBM News Tamil
Leading News Portal in Tamil

150-வது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி! | mumbai indians registers 150 number of victories in ipl


மும்பை: ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும்.

மேலும் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை சுவைத்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை அணி பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 150 வெற்றி, 121 தோல்விகளைப் பெற்றுள்ளது.

மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளையும், கொல்கத்தா அணி 134 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 129 வெற்றிகளையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 121 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 117 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 114 வெற்றிகளையும் பெற்றுள்ளது.