EBM News Tamil
Leading News Portal in Tamil

கோலி, க்ருணால் பாண்டியா அபாரம்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025 | DC vs RCB, IPL 2025 Highlights


ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த போட்டிய்ல் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் அசோக் பொரெல், டூ ப்ளெஸ்ஸிஸ் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் அசோக் பொரெல் 28 ரன்கள், டூ ப்ளெஸ்ஸிஸ் 22 ரன்களுடன் வெளியேறினர்.

கருண் நாயர் 4 ரன்களுடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 41 ரன்கள் விளாசினார். அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. அக்சர் படேல் 15, ஸ்டப்ஸ் 34, அஷுடோஷ் சர்மா 2, விப்ராஜ் நிகாம் 12 என 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.

163 எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெதெல் 12 ரன்கள் எடுத்தார். கோலி அரை சதம் எடுத்து அசத்தினார். அதிகபட்சமாக க்ருணல் பாண்டியா 73 ரன்கள் விளாசினார். இதன் படி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது ஆர்சிபி.