‘ஹர்திக், ரோஹித் மீதான நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழந்ததில்லை’ – பொல்லார்ட் | We never lost faith in Hardik Rohit says mi batting coach Pollard
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி ஒருபோதும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் மீதான நம்பிக்கையை இழந்ததில்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி உடன் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை 5-வது இடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணியும் ரன் ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது.
“ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு சமயங்களில் சரிவு இருக்கும். அது மாதிரியான நேரத்தில் அவர்களுக்கு கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படும். இப்போது ரோஹித் சிறப்பாக ஆடி ரன் சேர்க்கிறார். இதன் மூலம் எங்கள் அணி மகிழ்ச்சி அடைந்துள்ளது.
அதேபோல ஹர்திக் பாண்டியாவும் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறார். உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பட்டங்களை சர்வதேச களத்தில் வென்றுள்ளார். அவர் நம்பிக்கையுடன் காணப்படுகிறார்” என பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.