பஞ்சாப் ஓப்பனர்கள் அதிரடி: கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் இலக்கு! | punjab kings sets 204 runs as target for kkr ipl match 44
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணிக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர்.
பிரியான்ஷ் ஆர்யா, 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட் செய்ய வந்தார். பிரப்சிம்ரன் சிங், 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 7, யான்சன் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி 4 ஓவர்களில் வெறும் 34 ரன்களை மட்டுமே எடுத்தது பஞ்சாப்.
16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் ஸ்ரேயாஸ். 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார் இங்கிலிஸ். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா 2, வருண் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கொல்கத்தாவுக்கு 202 ரன்கள் தேவை.