EBM News Tamil
Leading News Portal in Tamil

பஞ்சாப் – கொல்கத்தா இடையிலான போட்டி மழையால் பாதிப்பு | ஐபிஎல் 2025 | IPL 2025: Rain Returns At Eden Gardens,


நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணிக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 120 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா 2, வருண் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 202 ரன்கள் தேவை என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் – சுனில் நரேன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். ஏழு இருவரும் ரன்கள் எடுத்த நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும்.