EBM News Tamil
Leading News Portal in Tamil

டி 20-ல் 400 ஆட்டங்களில் பங்கேற்று தோனி சாதனை | MS Dhoni becomes fourth Indian cricketer to play 400 T20 matches


சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. இந்த போட்டி சிஎஸ்கே கேப்​டன் எம்​.எஸ்​.தோனிக்கு 400-வது ஆட்​ட​மாக அமைந்​தது.

இதன் மூலம் 400 டி 20 போட்​டிகளில் விளை​யாடிய 4-வது இந்​திய கிரிக்​கெட் வீரர் என்ற பெரு​மையை தோனி பெற்​றார். இந்த வகை சாதனை​யில் இந்​திய வீரர்​களில் ரோஹித் சர்மா (456) முதலிடத்​தில் உள்​ளார். தினேஷ் கார்த்​திக் (412) 2-வது இடத்​தி​லும், விராட் கோலி (407) 3-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

அதேவேளை​யில் உலக அரங்​கில் தோனி 24-வது இடத்​தில் உள்​ளார். மேற்கு இந்​தி​யத் தீவு​களின் கெய்​ரன் பொலார்ட் 695 போட்​டிகளில் விளையாடி முதலிடத்​தில் உள்ளார். இந்​தி​யா, சிஎஸ்​கே, ரைசிங் புனே சூப்​பர் ஜெயண்ட், ஜார்க்​கண்ட் ஆகிய அணி​களுக்​காக டி 20 போட்டிகளில் விளை​யாடி உள்ள தோனி 7,572 ரன்​கள் குவித்​துள்​ளார்.

ஐபிஎல் வரலாற்​றில் அதிக ரன்​கள் குவித்த வீரர்​களின் பட்​டியலில் தோனி 6-வது இடத்​தில் உள்​ளார். ஐபிஎல் தொடரில் 273 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 24 அரை சதங்​களு​டன் 5,383 ரன்​கள் குவித்​துள்​ளார். அவருடைய அதி​கபட்ச ஸ்கோர் 84* ஆகும். 43 வயதான தோனி, நடப்பு சீசனில் ருது​ராஜ் கெய்க்வாட் கா​யம் காரண​மாக வில​கிய​தால் மீண்​டும் கேப்​டன் பொறுப்பை ஏற்று சிஎஸ்​கே அணி​யை வழிநடத்​தி வருகிறார்​.