EBM News Tamil
Leading News Portal in Tamil

சின்னசாமி மைதானத்தில் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி | ஐபிஎல் 2025 | RCB vs RR IPL 2025 live score: RCB defeat RR by 11 runs


ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி, ராஜஸ்​தான் ராயல்​ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்​தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர்.

இதில் 42 பந்துகளில் விராட் கோலி 70 ரன்கள் விளாசி அசத்தினார். ஃபில் சால்ட் 26 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 50, டிம் டேவிட் 23, ரஜத் பட்டிதார் 1 ஜிதேஷ் சர்மா 20 என 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்தது ஆர்சிபி அணி.

இதையடுத்து களத்துக்கு வந்த ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அசத்தினார். வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராணா 28, ரியான் பராக் 22, துருவ் ஜுரேல் 47, ஹெட்மயர் 11, ஷுபம் துபே 12 என 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து தோற்றது. கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் தடுமாற்றமே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த சீசன் தொடங்கியதிலிருந்து தங்கள் சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒருமுறை கூட ஆர்சிபி வெற்றி பெறாத நிலையில், இந்த போட்டியின் மூலம் இந்த சீசனில் சின்னசாமி ஸ்டேடியத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆர்சிபி.