EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னையில் வாலிபால் பயிற்சி முகாம்! | Volleyball training camp in Chennai


சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான 41-வது ஆண்டு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சி முகாம் வரும் 28-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அன்றைய தினமே தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் செயலாளர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் பி.ஜெகதீசனை 9382207524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.