நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பின்னர் லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2, ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்த லக்னோ அணியால் அதன் பின்னர் சீரான முறையில் ரன் சேர்க்க முடியவில்லை. மார்ஷ், 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து லக்னோ.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 160 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. இதில் ஓப்பனிங் இறங்கிய அபிஷேக் பொரெல் 36 பந்துகளில் அரை சதம் (51) விளாசி அசத்தினார். மறுமுறையில் கருண் நாயர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றவதாக இறங்கிய கே.எல்.ராகுல் 57 ரன்களை குவித்தார். அக்சர் படேல் .34 ரன்கள் எடுத்தார். இப்படியாக 17 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை துவம்சம் செய்தது டெல்லி அணி.