தோனியை விட அதிவேகம் – ஐபிஎல் வரலாற்றில் கே.எல்.ராகுல் சாதனை! | KL Rahul faster than MS Dhoni, AB de Villiers to hit 200 sixes IPL 2025
ஐபில் போட்டிகளில் அதிகவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்தியர் என்ற பெருமையை டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல். ராகுல் பெற்றார். இதன் மூலம் எம்.எஸ். தோனி மற்றும் ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 35-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
இந்த போட்டியில் 12 பந்துகளில் 24 ரன்களை விளாசிய கே.எல்.ராகுல் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 200 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார் ராகுல்.
தனது 129வது ஐபிஎல் இன்னிங்ஸில் 200 சிக்ஸர்களை வேகமாக எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார். கிறிஸ் கெய்ல் (69 இன்னிங்ஸ்) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (97 இன்னிங்ஸ்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை விரைவாக எட்டியுள்ளனர். ராகுலுக்கு முன்பு, சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்களை வேகமாக அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் அதிவேக 200 சிக்ஸர்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்)
கிறிஸ் கெய்ல் – 69 இன்னிங்ஸ்
ஆண்ட்ரே ரஸ்ஸல் – 97 இன்னிங்ஸ்
கேஎல் ராகுல் – 129 இன்னிங்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ் – 137 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் – 148 இன்னிங்ஸ்
கீரோன் பொல்லார்ட் – 150 இன்னிங்ஸ்
சஞ்சு சாம்சன் – 159 இன்னிங்ஸ்
எம்எஸ் தோனி – 165 இன்னிங்ஸ்
விராட் கோலி – 180 இன்னிங்ஸ்
ரோஹித் சர்மா – 185 இன்னிங்ஸ்
சுரேஷ் ரெய்னா – 193 இன்னிங்ஸ்