ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் | ஐபிஎல் 2025 | IPL 2025: Mumbai Indians beat Sunrisers Hyderabad
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர்.
இதில் 28 பந்துகளில் அபிஷேக் சர்மா 40 ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய டிராவிஸ் ஹெட் 28 ரன்கல் எடுத்தார். அடுத்து இறங்கிய இஷான் கிஷன் 2 ரன்களுடன் வெளியேறவே நிதிஷ் குமார் ரெட்டி ரன்கள் எடுத்தார். கிளாசன் 37, அனிகெத் வர்மா 18, பாட் கம்மின்ஸ் 8 என 20 ஓவர் முடிவில் 162 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரையான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இறங்கினார். இதில் ரோஹித் 26 ரன்களுடன் வெளியேறினார். எதிரில் ஆடிய ரிக்கல்டன் 31 ரன்கள் எடுத்தா. வில் ஜாக்ஸ் 36, சூர்யகுமார் யாதவ் 26, திலக் வர்மா 21, ஹர்திக் பாண்டியா 21 என 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை அணி.