EBM News Tamil
Leading News Portal in Tamil

கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறியது ஆர்எம்கே அணி | Inter-college T20 cricket RMK team advances to the semi-finals


சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி – வேலம்மாள் பொறியியல் கல்லூரி மோதின. முதலில் பேட் செய்த ஆர்எம்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சுந்தரேசன் 52, திவாகர் 32 ரன்கள் சேர்த்தனர்.

159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வேலம்மாள் அணி 15.1 ஓவரில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிவசீலன், கார்த்திக் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்எம்கே அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் ஆர்எம்கே அணி, சாய் ராம் பொறியியல் கல்லூரி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

அந்த அணி கால் இறுதி ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீபெரும்புதூர் எஸ்விசிஇ கல்லூரியை தோற்கடித்திருந்தது. இன்று நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் லயோலா – சத்தியபாமா பல்கலைக்கழக அணிகள் மோதுகின்றன.