EBM News Tamil
Leading News Portal in Tamil

சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் | rajasthan royals captain Sanju Samson fined Rs 24 lakhs ipl 2025


ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ராஜஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 2-வது முறையாகும். இதனால் கேப்டனுடன் விளையாடும் லெவன் மற்றும் இம்பாக்ட் பிளேயர் விதியில் களமிறங்கிய வீரருக்கும் தலா 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் ஆகியவற்றில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ? அதை அபராதமாக செலுத்த வேண்டும் என ஐபிஎல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.