கல்லூரிகளுக்கு இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம் | Inter college T20 cricket series begins today
சென்னை: சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி 20 கிரிக்கெட் தொடர் இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஸ்ரீபெரும்புதூர் எஸ்விசிஇ, சாய்ராம், அண்ணா பல்கலைக்கழகம், ஆர்எம்கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, விஜடி, லயோலா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடக்க நாளான இன்று போட்டியை ஆர்எம்கே கல்வி குழுமத்தின் இயக்குநர் ஜோதி நாயுடு தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளார் யலமஞ்சி பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.