EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி | RR vs PBKS  | PBKS vs RR highlights, IPL 2025:


நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஜெய்ஸ்வால் ஐந்து சிக்ஸர், 3 பவுண்டரி என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ஆடிய சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து இறங்கிய ரியான் பராக் 43 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ரானா 12 ரன்கள், ஹெட்மெயர் 20 ரன்கள், துருவ ஜுரேல் 13 என 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்திருந்தது.

206 ரன்கல் என்ற இலக்குடன் இறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 17 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 10 ரன்கள், மார்கஸ் ஸ்டாய்னின் 1 ரன்கள் எடுத்தனர். அடுத்து இறங்கிய நேஹால் வதேரா 62 ரன்கள் விளாசி நம்பிக்கையூட்டினார். கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து மீண்டும் அணி துவண்டது. அடுத்தடுத்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.