EBM News Tamil
Leading News Portal in Tamil

சேப்பாக்கத்தில் டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? | csk to play with delhi capitals today in chepauk ipl 2025 match preview


சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் தடு​மாறி வரும் சென்னை சூப்​பர் கிங்​ஸ், புத்​து​யிர் பெற்​றுள்ள டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே இம்​முறை தொடக்​கத்​திலேயே தடு​மாற்​றத்தை சந்​தித்​துள்​ளது. முதல் ஆட்​டத்​தில் மும்​பையை வீழ்த்​திய நிலை​யில் அடுத்த இரு ஆட்​டங்​களி​லும் முறையே பெங்​களூரு, ராஜஸ்​தானிடம் தோல்வி கண்​டிருந்​தது. அதேவேளை​யில் டெல்லி கேப்​பிடல்ஸ் பேட்​டிங்​கில் பலம் வாய்ந்த சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​களை வீழ்த்​தி ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்​கு​கிறது. இன்​றைய ஆட்​டத்​தில் ரிஸ்ட் ஸ்பின்​னர்​களான நூர் அகமது, குல்​தீப் யாதவ் ஆகியோர் மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது.

ஏனெனில் உலர்ந்த மற்​றும் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதகமான ஆடு​களத்​துடன் பிற்​பகலில் போட்டி நடை​பெறு​வ​தால் இவர்​கள் இரு​வருமே தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடும். டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யின் குல்​தீப் யாதவ் நடப்பு சீசனில் ஓவருக்கு சராசரி​யாக 5.25 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து எதிரணி​யின் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தி​ய​தில் முக்​கிய பங்கு வகித்​துள்​ளார். அவர், சென்னை அணி​யின் நடு​வரிசை பேட்​டிங்​குக்கு சவால் அளிக்​கக்​கூடும்.

அதேவேளை​யில் சிஎஸ்​கே​வின் நூர் அகமது ஓவருக்கு சராசரி​யாக 6.83 ரன்​களை வழங்​கிய நிலை​யில் 9 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். நடுஓவர்​களில் அவர், பேட்​ஸ்​மேன்​களுக்கு நெருக்​கடி கொடுப்​ப​தில் அபாயகர​மான வீர​ராக திகழ்ந்து வரு​கிறார். இவர்​களது இரு​வரின் பந்​து​வீச்சு பாணி​யும் வேறு​பட்​ட​வை, அதி​லும் புதி​ரானதும் கூட. குல்​தீப் யாதவ் ஃபிளைட், லென்ந்த், கை வேகத்​தில் ஏற்​படும் மாற்​றங்​களை நம்​பி​யுள்​ளார். அதே நேரத்​தில் நூர் அகமது பிளாட்​டாக​வும், வேக​மாக​வும் பந்து வீசுகிறார். வலது கை பேட்​ஸ்​மேன்​களுக்கு எதி​ராக பந்தை அதி​கம் திருப்​பு​கிறார். இதனால் இவர்​கள் இரு​வருமே களத்​தில் நில​வும் சூழ்​நிலைகள் சாதக​மாக இருக்​கும் பட்​சத்​தில் எதிரணி​யின் மிடில் ஆர்​டரை கட்​டுப்​படுத்​து​வ​தில் முக்​கிய​மானவர்​களாக திகழக்​கூடும். அதேவேளை​யில் வேகப்​பந்து வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் 5 விக்​கெட்​களை வீழ்த்​திய மிட்​செல் ஸ்டார்க் நெருக்​கடி கொடுக்​கக்​கூடும்.

பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் டெல்லி அணி​யில் டு பிளெஸ்​ஸிஸ், ஜேக் பிரேசர் மெக்​கர்க், கே.எல்​.​ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும் திறன் கொண்​ட​வர்​கள். பின் வரிசை​யில் அஷுதோஷ் சர்​மா, அக்​சர் படேல், விப்​ராஜ் நிகாம் ஆகியோர் கைகொடுக்​கக்​கூடிய​வர்​கள். இதில் அஷுதோஷ் சர்​மா, லக்னோ அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 31 பந்​துகளில், 66 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பு செய்​திருந்​தார். மேலும் டு பிளெஸ்​ஸிஸ் கடந்த காலங்​களில் சிஎஸ்​கேவுக்​காக விளை​யாடி உள்​ள​தால் அவர், தனது அனுபவத்​தால் அணி​யில் உள்ள இளம் பேட்​ஸ்​மேன்​களை வழிநடத்​தக்​கூடும். ஒட்​டுமொத்​த​மாக சிஎஸ்​கேவுடன் ஒப்​பிடு​கை​யில் டெல்லி அணி​யின் டாப் ஆர்​டர், நடு​வரிசை, பின்​வரிசை பேட்​டிங் பலமாகவே காணப்​படு​கிறது.

சிஎஸ்​கே​வின் பேட்​டிங் தொடக்​கத்​தி​லும் சரி, இறு​தி​யிலும் சரி உத்​வேகம் இல்​லாமல் உள்​ளது. கடந்த சீசன்​களில் ஆக்​ரோஷம் காட்​டிய ஷிவம் துபே பார்​மின்றி தவித்து வரு​கிறார். ருது​ராஜ் கெய்க்​வாட் 3-வது வீர​ராக களமிறங்​கு​வதும் பாதக​மான நிலையை உரு​வாக்கி உள்​ளது. தொடக்க வீர​ரான ராகுல் திரி​பாதி வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக தடு​மாறு​வது வாடிக்​கை​யாக உள்​ளது. மற்​றொரு தொடக்க வீர​ரான ரச்​சின் ரவீந்​திரா மந்​த​மாக விளை​யாடு​வதும் அணி​யின் பலவீனத்தை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது.

நடு​வரிசை​யில் தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோ​ருக்கு பதிலாக கடந்த ஆட்​டத்​தில் களமிறக்​கப்​பட்ட விஜய் சங்​கர், ஜேமி ஓவர்​டன் ஆகியோரிடம் இருந்​தும் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. இதே​போன்று பின்​வரிசை​யில் முக்​கிய​மான கட்​டங்​களில் தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் ரவீந்​திர ஜடேஜா, தோனி ஆகியோரிடம் இருந்து நடப்பு சீசனில் ரன் வறட்சி நில​வுவது அணி​யின் ஒட்​டுமொத்த பேட்​டிங் வரிசையை​யும் பலவீனப்​படுத்தி உள்​ளது.

இதே​போன்று பந்து வீச்​சில் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோரை தவிர மற்ற வீரர்​கள் எதிரணி​யின் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​து​வ​தில் தேக்​கம் அடைகின்​றனர். ஜடேஜா, அஸ்​வின், பதிரனா ஆகியோரிடம் இருந்து திருப்பு முனையை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை.

இதில் அஸ்​வின் பவர்​பிளே​வில் அதிக ரன்​களை வாரி வழங்​கு​வது பலவீன​மாக உள்​ளது. இதனால் சிஎஸ்கே அணி வெற்​றிப் பாதைக்கு திரும்ப வேண்​டுமென்​றால் அணிச் சேர்க்​கையை மாற்றி அமைக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. அநே​மாக இன்​றைய ஆட்​டத்​தில்​ டாப்​ ஆர்​டரில்​ டேவன்​ கான்​வே களமிறக்​கப்​படக்​கூடும்​.

சேப்பாக்கில் எப்படி? – சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் சிஎஸ்கே 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் தற்போதைய டெல்லி அணி கெவின் பீட்டர்சனின் ஆலோசனையாலும் அக்சர் படேலின் கேப்டன்சியாலும் முன்னெப்போதையும் விட சமநிலையுடனும் ஆற்றலுடனும் இருப்பதாகத் தெரிகிறது.