புள்ளிப் பட்டியலில் டெல்லி முதலிடம்: 8-வது இடத்தில் சிஎஸ்கே | IPL 2025 | delhi capitals tops points table ipl 2025 update
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளை அந்த அணி பெற்றது. சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்களில் வீழ்த்தி அந்த அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி முதல் இடத்தில் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக மூன்று அணிகளில் சிஎஸ்கே தோல்வி பெற்றுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று 12 ரன்களில் மும்பையை வீழ்த்திய லக்னோ அணி 6-வது இடத்துக்கு முன்னேறியது. 2-வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. பட்டியலில் கடைசி இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது.
புள்ளிப் பட்டியல்
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | ரன் ரேட் | புள்ளி | |
1 | டெல்லி | 3 | 3 | 0 | 1.257 | 6 |
2 | பஞ்சாப் கிங்ஸ் | 2 | 2 | 0 | 1.485 | 4 |
3 | ஆர்சிபி | 3 | 2 | 1 | 1.149 | 4 |
4 | குஜராத் டைட்டன்ஸ் | 3 | 2 | 1 | 0.807 | 4 |
5 | கேகேஆர் | 4 | 2 | 2 | 0.070 | 4 |
6 | எல்எஸ்ஜி | 4 | 2 | 2 | 0.048 | 4 |
7 | மும்பை இந்தியன்ஸ் | 4 | 1 | 3 | 0.108 | 2 |
8 | சிஎஸ்கே | 4 | 1 | 3 | -0.891 | 2 |
9 | ராஜஸ்தான் | 3 | 1 | 2 | -1.112 | 2 |
10 | எஸ்ஆர்ஹெச் | 4 | 1 | 3 | -1.612 | 2 |
(டெல்லி மற்றும் சென்னை இடையிலான ஆட்டத்துக்கு பிறகான அப்டேட்)