EBM News Tamil
Leading News Portal in Tamil

2-வது வெற்றியைப் பெறப் போவது யார்? கொல்கத்தா – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை | match preview srh versus kkr ipl 2025


கொல்​கத்தா: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன.

இந்த ஆட்​டம் கொல்​கத்​தா​விலுள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்​க​வுள்​ளது. கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத் ஆகிய 2 அணி​களுமே இது​வரை 3 போட்​டிகளில் விளை​யாடி தலா ஒரு வெற்​றி, 2 தோல்வி​களைப் பெற்​றுள்​ளது.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் 2-வது வெற்​றியைப் பெற 2 அணிகளுமே போராடும் என்​ப​தில் சந்​தேகமில்​லை. ஹைத​ரா​பாத் அணி​யில் அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்​டி, ஹென்​ரிச் கிளாசன், அனிகேட் வர்மா ஆகியோர் அபார​மாக விளை​யாடி வரு​கின்​றனர். அவர்​களிட​மிருந்து இன்​றைய ஆட்​டத்​தில் சிறப்​பான இன்​னிங்ஸ் வெளிப்​படு​மா​னால் அது அந்த அணிக்கு 2-வது வெற்​றியை எளி​தில் பெற்​றுத் தரும்.

அதே​போல் பவுலிங்​கிலும் முகமது ஷமி, அபிஷேக் சர்​மா, கேப்​டன் பாட் கம்​மின்​ஸ், ஜீஷன் அன்​சாரி ஆகியோ​ரும் தங்​களது முழுத் திறனை​யும் வெளிப்​படுத்த வேண்​டும். டெல்லி அணிக்​கெ​திரான போட்​டி​யில், ஹைத​ராபாத் அணியின் பந்​து​வீச்சு சுத்​த​மாக எடு​பட​வில்​லை. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி எளி​தில் வெற்றி பெற்​றது. எனவே, அனுபவமிக்க பந்​து​வீச்​சாளர்​கள் அணி​யின் வெற்​றிக்​காக சிறப்​பாக செயல்​படு​வார்​கள் என எதிர்​பார்க்​கலாம்.

அதே​போல், கொல்​கத்தா அணி​யும் 2-வது வெற்​றிக்​காக தீவிர​மாகப் போராடும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். பெங்​களூரு, மும்பை அணி​களிடம் தோல்வி கண்ட அந்த அணி, ராஜஸ்​தான் அணி​யிடம் மட்​டுமே வெற்றிகண்​டது.

ராஜஸ்​தான் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் குயிண்​டன் டி காக் அபார​மாக விளை​யாடி 97 ரன்​கள் குவித்​தார். ஆனால் அதன் பின்​னர் அவரிடமிருந்து பெரிய இன்​னிங்ஸ் வெளிப்​பட​வில்​லை. பெங்​களூரு அணிக்​கெ​தி​ரான முதல் போட்​டி​யில் அபார​ மாக விளை​யாடிய கேப்​டன் அஜிங்​கிய ரஹானே, சுனில் நரேன், அங்​கிரிஷ் ரகு​வன்ஷி ஆகியோரிட​மிருந்து சிறப்​பான இன்​னிங்ஸ் இன்று வெளிப்​படலாம். அவ்​வாறு உயர்​மட்ட செயல்​திறனை கொல்​கத்தா அணி வெளிப்​படுத்​தி​னால் மட்​டுமே வெற்றி காண முடி​யும்.

அதே​போல் பந்​து​வீச்​சாளர்​கள் வைபவ் அரோ​ரா, வருண் சக்​ர​வர்த்​தி, ஹர்​ஷித் ராணா, சுனில் நரேன், ஸ்பென்​ஸர் ஜான்​சன் ஆகியோ​ரும் சிறப்பாக பந்​து​வீசும் பட்​சத்​தில்​ அந்​த அணிக்​கு வெற்​றி கைகூடலாம்​.