EBM News Tamil
Leading News Portal in Tamil

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வைட் ராஜினாமா! | West Indies captain kraigg Brathwaite resigns


கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மேற்கு இந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் கேப்டனாக பிராத்வைட் இருந்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று கிரெய்க் பிராத்வை திடீரென அறிவித்தார். இந்நிலையில், டி20 அணியின் கேப்டனாக இருந்த ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப்பை கேப்டனாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.