ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹசரங்காவின் ‘புஷ்பா’ ஸ்டைல் | wanindu hasaranga celebrated in pushpa style ipl 2025
விசாகப்பட்டினம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, நேற்று முன்தினம் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது விக்கெட் எடுத்ததும், புஷ்பா திரைப்பட ஸ்டைலில் கொண்டாடியதை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.
இது குறித்து வனிந்து ஹசரங்கா கூறும்போது, ‘‘நான் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை விரும்பிப் பார்ப்பேன். புஷ்பா திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படமாகும். அதனால்தான் விக்கெட்களை வீழ்த்தியபோது ‘புஷ்பா’ பட பாணியில் கொண்டாடினேன்’’ என்றார்.