EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னையில் நாளை முதல் கிளப் கூடைப்பந்து போட்டி | Club basketball tournament to begin in Chennai tomorrow


சென்னை: சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் உள்ளூர் அணி மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகளும் பங்கேற்கவுள்ளன. போட்டியில் தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்). திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த முதலாவது சபா கிளப் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது, வரும் மே மாதம் நடைபெறவுள்ள எப்ஜபிஏ டபிள்யூஏஎஸ்எல் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.