EBM News Tamil
Leading News Portal in Tamil

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி தொடருமா? – லக்னோவுடன் இன்று மோதல் | IPL 2025 | Will Punjab Kings continue their winning streak Today to play with lsg IPL 2025


லக்னோ: ஐபிஎல் கிரிக்​கெட் சீசனின் இன்​றைய லீக் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

உத்​தரபிரதேச மாநிலம் லக்​னோ​விலுள்ள அடல்​பி​காரி வாஜ்​பாய் இகானா கிரிக்​கெட் மைதானத்​தில் இந்​தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்​குத் தொடங்​க​வுள்​ளது. லக்னோ அணி இது​வரை 2 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, ஒரு தோல்வி என்ற நிலை​யில் களமிறங்​கு​கிறது. முதல் போட்​டி​யில் டெல்லி அணி​யிடம் தோல்வி கண்ட லக்​னோ, 2-வது ஆட்​டத்​தில் வலு​வான சன்​ரைசர்ஸ் ஹைதர​பாத் அணி​யைத் தோற்​கடித்​தது.

லக்னோ அணி​யின் பேட்​டிங் எய்​டன் மார்​கிரம், மிட்​செல் மார்​ஷ், நிக்​கோலஸ் பூரன், ரிஷப் பந்த், டேவிட் மில்​லர், ஆயுஷ் பதோனி என மிக​வும் வலு​வாகக் காணப்​படு​கிறது. டெல்லி அணி​யுட​னான போட்​டி​யில் மிட்​செல் மார்​ஷும், நிக்​கோலஸ் பூரனும் அதிரடி​யாக விளை​யாடினர். மார்ஷ் 36 பந்​துகளில் 72 ரன்​களும், பூரன் 30 பந்​துகளில் 75 ரன்​களும் குவித்து மிரட்​டினர். இறு​திக் கட்​டத்​தில் டேவிட் மில்​லர் 19 பந்​துகளில் 27 ரன்​கள் குவித்​தார். அதே​போல் ஹைத​ரா​பாத் அணி​யுட​னான ஆட்​டத்​தில் மிட்​செல் மார்ஷ் அரை சதம் விளாசி​னார். நிக்​கோலஸ் பூரன் 26 பந்​துகளில் 70 ரன்​களைக் குவித்து லக்னோ வெற்றி பெற உதவி​னார்.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் மிட்​செல் மார்​ஷ், நிக்​கோலஸ் பூரன் ஆகியோரிட​மிருந்து மேலும் ஒரு சிறப்​பான இன்​னிங்ஸ் வெளிப்​படும் என்று எதிர்​பார்க்​கலாம். அதே​போல் ரிஷப் பந்த், ஆயுஷ் பதோனி, எய்​டன் மார்​கிரம், டேவிட் மில்லர், அப்​துல் சமத் ஆகியோ​ரும் சிறப்​பாக விளை​யாடும் பட்​சத்​தில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு எளி​தாகும்.

மேலும், பந்​து​வீச்​சில் ஷர்​துல் தாக்​குர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், திக்​வேஷ் ராத்​தி, அவேஷ் கான் ஆகியோர் சிறப்​பாக பந்​து​வீசி வரு​கின்​றனர். பஞ்​சாப் அணிக்​கெ​தி​ரான போட்​டி​யின்​போது, லக்​னோ​வின் பந்​து​வீச்​சுக் குழு அபார​மாக பந்​து​வீசி மிரட்​டக் காத்​திருக்​கிறது.

இந்​நிலை​யில் பஞ்​சாப் கிங்ஸ் அணி ஒரேயொரு ஆட்​டத்​தில் விளை​யாடி வெற்றி பெற்ற உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. குஜ​ராத் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 243 ரன்​களைக் குவித்து மிரட்​டியது. பிரியன்ஷ் ஆர்யா 47, ஸ்ரேயஸ் ஐயர் 97, சஷாங் சிங் 44 ரன்​கள் குவித்து எதிரணியை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கினர்.

எனவே, லக்னோ அணி​யுட​னான போட்​டி​யின்​போது பிரியன்ஷ் ஆர்​யா, கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர், அஸ்​மத்​துல்லா ஒமர்​ஸாய், மார்​கஸ் ஸ்டாய்​னிஸ், கிளென் மேக்​ஸ்​வெல், சஷாங் சிங் ஆகியோரிட​மிருந்து சிறப்​பான இன்​னிங்ஸை ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர்.

பவுலிங்​கிலும் அந்த அணி வலு​வான பந்​து​வீச்​சுப் படையைக் கொண்​டுள்​ளது. அர்​ஷ்தீப் சிங், அஸ்​மத்​துல்லா ஒமர்​ஸாய், மார்கோ யான்​சன், கிளென் மேக்​ஸ்​வெல், யுவேந்​திர சாஹல் ஆகியோர் எதிரணி வீரர்​களின் ரன்​கு​விப்பை ஒடுக்​கக் காத்​திருக்​கின்​றனர். குஜ​ராத் அணி​யுட​னான போட்​டி​யின்​போது விஜயகு​மார் வைஷாக், கடைசி கட்ட ஓவர்​களில் சிறப்​பாக பந்​து​வீசி, பஞ்​சாப் அணியை வெற்றி பெறச் செய்​தார்.

எனவே, லக்னோ அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் அவரிட​மிருந்​தும்​ சிறப்​பான பந்​து​வீச்​சுத்​ ​திறன்​ வெளிப்​படலாம்​.