EBM News Tamil
Leading News Portal in Tamil

முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்? – கொல்கத்தா அணியுடன் இன்று மோதல் | Will Mumbai Indians get their first win in ipl 2025 was explained


மும்பை: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

மும்பை வான்​கடே மைதானத்​தில் இந்த ஆட்​டம் நடை​பெறவுள்​ளது. மும்பை அணி, இந்த சீசனில் முதல் 2 போட்​டிகளி​லும் தோல்வி கண்ட நிலை​யில் களமிறங்​கு​கிறது. சொந்த மைதானத்​தில் விளை​யாட இருப்​ப​தால் முதல் வெற்​றியைப் பெறும் முனைப்​புடன் அந்த அணி களமிறங்​கு​கிறது. சென்​னை​யில் சிஎஸ்​கே, அகம​தா​பாத்​தில் குஜ​ராத் அணி​யுடன் நடை​பெற்ற ஆட்​டங்​களில் மும்பை அணி தோல்வி கண்​டது. இந்த 2 போட்​டிகளி​லும் மும்பை அணி​யின் பேட்​டிங் சுத்​த​மாக எடு​பட​வில்​லை.

சென்​னை​யில் நடை​பெற்ற போட்​டி​யில் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா டக்​-அவுட்​டா​னார். மேலும் குஜ​ராத்​துட​னான ஆட்​டத்​தில் 2 பவுண்​டரி​களை விளாசிய பின்​னர் 8 ரன்​களி​லேயே ஆட்​ட​மிழந்து ரசிகர்​களை ஏமாற்​றி​னார். அதே​போல் மற்​றொரு தொடக்க ஆட்​டக்​காரர் ரியான் ரிக்​கெல்​டனிட​மிருந்து எதிர்​பார்த்த சிறப்​பான இன்​னிங்ஸ் வெளிப்​பட​வில்​லை.

திலக் வர்​மா, சூர்​யகு​மார் யாதவ் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாட முயன்​றாலும் அவர்​களிட​மிருந்து பெரிய இன்​னிங்ஸ் இது​வரை வெளிப்​பட​வில்​லை.

கொல்​கத்தா அணி​யுட​னான ஆட்​டத்​தில் ரோஹித் சர்​மா, ரியான் ரிக்​கெல்​டன், சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டி​யா, திலக் வர்மா ஆகியோர் சிறப்​பாக விளை​யாடும்​பட்​சத்​தில் அந்த அணி வெற்​றிப்​பாதைக்​குத் திரும்​பலாம்.

மும்​பை​யின் பேட்​டிங் மோச​மாக​வுள்ள நிலை​யில் பவுலிங்​கிலும் அந்த அணி கவனம் செலுத்த வேண்​டி​யுள்​ளது. கொல்​கத்தா அணியை மிரளச் செய்ய வேண்​டு​மா​னால் டிரெண்ட் போல்ட், சாஹர், மிட்​செல் சான்ட்​னர், சத்​ய​நா​ராயண ராஜு ஆகியோர் சிறந்த பந்​து​வீச்சை பதிவு செய்​ய​வேண்​டிய நிலை​யில் உள்​ளனர்.

அதே​நேரத்​தில், கொல்​கத்தா அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒன்​றில் வெற்​றி, ஒன்​றில் தோல்வி என்ற நிலை​யில் இன்று 3-வது ஆட்​டத்​தில் விளை​யாட உள்​ளது. ஆர்​சிபி அணிக்​கெ​தி​ராக தோல்வி பெற்ற அந்த அணி, ராஜஸ்​தான் அணியை எளி​தில் வீழ்த்தி வெற்றி கண்​டது.

கொல்​கத்தா அணி​யின் குயிண்​டன் டி காக், அஜிங்க்ய ரஹானே, அங்​கிரிஷ் ரகு​வன்​ஷி, வெங்​கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோர் பிர​காசிக்​கும் பட்​சத்​தில் அந்த அணிக்கு வெற்றி எளி​தாகும்.

பவுலிங்​கில் வைபவ் அரோ​ரா, ஸ்பென்​ஸர் ஜான்​சன், வருண் சக்​ர​வர்த்​தி, ஹர்​ஷித் ராணா, சுனில் நரேன், மொயீன் அலி ஆகியோர்​ தங்​களது அனுபவத்​தை வெளிப்​படுத்​த ​காத்​திருக்​கின்​றனர்​.