EBM News Tamil
Leading News Portal in Tamil

ராஜஸ்தானுடன் குவாஹாட்டியில் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் சிஎஸ்கே? | Clash with Rajasthan in Guwahati today does CSK bounce back from defeat


குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் குவாஹாட்​டி​யில் இன்று இரவு 7.30க்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, 2008-ம் சாம்​பிய​னான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளை​யாடு​கிறது.

ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் சேப்​பாக்​கத்​தில் 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணியை வீழ்த்​தி​யிருந்​தது. தொடர்ந்து நேற்​று​முன்​தினம் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யிடம் 50 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அதேவேளை​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 44 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிட​மும், 2-வது ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யிட​மும் வீழ்ந்​திருந்​தது.

ஆர்​சிபிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி பேட்​டிங், பந்து வீச்​சு, பீல்​டிங் என அனைத்து துறை​யிலும் மோச​மாக செயல்​பட்​டது. எதை பலமாக (சுழற்​பந்து வீச்​சு) அந்த அணி கரு​தி​யதோ, அந்த ஆயுதத்தை ஆர்​சிபி ஒன்​றும் இல்​லாமல் சிதைத்​து​விட்​டது. ஒரே நாளில் இந்த தோல்​வி​யில் இருந்து அதி​லும் குவாஹாட்​டிக்கு பயணம் செய்து அங்கு சிஎஸ்கே அணி எப்​படி மீண்டு வரப்​போகிறது என்​பதை காண ரசிகர்​கள் ஆவலுடன் உள்​ளனர்.

ஒரு ஆறு​தல் அளிக்​கும் விஷ​யம் என்​னவென்​றால் போட்டி நடை​பெறும் பார்​சபரா ஸ்டிடேடி​யத்​தில் ரன்​கள் குவிப்​ப​தில் எந்​த​வித சிக்​கலும் இருக்​காது. மேலும் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பந்​து​வீச்​சும் பலவீன​மாக காணப்​படு​கிறது. இது ஒரு​புறம் இருக்க பொறுப்பு கேப்​ட​னாக உள்ள ரியான் பராக், கேப்​டன்​ஷி​யில் தடு​மாறு​வதை​யும் சிஎஸ்கே பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும். கடந்த 26-ம் தேதி இங்கு நடை​பெற்ற ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி​யின் சுழற்​பந்து வீச்​சாளர்​களான மொயின் அலி, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு ராஜஸ்​தான் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுத்​தனர்.

இதனால் நூர் அகமது, அஸ்​வின், ஜடேஜா ஆகியோரை உள்​ளடக்​கிய சிஎஸ்​கே​வின் சுழற்​பந்து வீச்சு குழு, ஆடு​களத்​துக்கு தகுந்​த​வாறு தங்​களது வியூ​கங்​களை மாற்றி செயல்​படுத்​தி​னால் வெற்​றிக்கு வழி​வகுக்​கலாம். பதிர​னா, கலீல் அகமது ஆகியோர் கூடு​தல் உத்​வேகத்​துடன் செயல்பட வேண்​டியது அவசி​யம்.

ராஜஸ்​தான் அணி அடுத்​தடுத்த இரு தோல்வி​களில் இருந்து மீண்டு வரு​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். சஞ்சு சாம்​சன் விரல் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் அவர், இந்த போட்​டி​யில் இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் மட்​டுமே விளை​யாடக்​கூடும். பேட்​டிங்​கில் ரியான் பராக், சாம்​சன், ஷுபம் துபே, நித்​திஷ் ராணா, துருவ் ஜூரெல் ஆகியோர் பொறுப்​புடன் விளை​யாடும் பட்​சத்​தில்​ நடப்​பு சீசனில்​ முதல்​ வெற்றியை ப​திவு செய்​யலாம்​.