EBM News Tamil
Leading News Portal in Tamil

அர்ஜெண்டினா கால்பந்து அணி அக்டோபரில் இந்தியா வருகை! | Argentina football team to visit India in October!


புதுடெல்லி: லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அந்த அணி கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் விளையாடுகிறது. மெஸ்ஸி 14 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், கேரள விளையாட்டு அமைச்சர் அப்துரஹிமான், அர்ஜெண்டினா கேரளாவுக்கு வருகை தந்து கொச்சியில் 2 நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக இணைந்துள்ளது ஹெச்எஸ்பிசி வங்கி.

இந்த கூட்டணியின் கீழ், லயோனல் மெஸ்ஸியை உள்ளடக்கிய அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து சர்வதேச கண்காட்சி போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.