EBM News Tamil
Leading News Portal in Tamil

‘சென்னை சிங்கம் ஐபிஎல்’ கியூஆர் குறியீடு அறிமுகம் – ரசிகர்கள் பாதுகாப்புக்காக ஏற்பாடு | ‘Chennai Singam IPL’ QR Code Introduced – Arrangements for Fans Safety


ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் ஐபிஎல்’ என்ற கியூ ஆர் குறியீட்டை போலீஸார் அறிமுகம் செய்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 23, 28ம் தேதி, ஏப்.4, 11, 25, 30, 12 ஆகிய நாட்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு வருவார்கள். இந்நிலையில், போட்டியை காண வரும் ரசிகர்கள், சிரமமின்றி செல்வதற்கும், போட்டியை காண்பதற்கும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், சென்னை காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 23ம் தேதி முதல் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களின் பாதுகாப்புக் காக ‘சென்னை சிங்கம் ஐபிஎல்’ என்ற கியூ ஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இந்த கியூ ஆர் குறியீடு மூலம் காவல் துறைக்கு புகார் தெரிவிக் கலாம். காவல் துறை உடனடியாக அந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.