EBM News Tamil
Leading News Portal in Tamil

“பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராபி வெல்வதே என் இலக்கு” – ஸ்ரேயஸ் ஐயர் உறுதி | MY GOAL IS TO LIFT THE TROPHY FOR PUNJAB KINGS – SHREYAS IYER


பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.

ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஏலத்தில் எடுக்கப்பட்ட தருணத்தில் இருந்தே, என்னுடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும், நான் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன், அவர்களுக்கு கொண்டாடுவதற்காக ஒரு காரணத்தை கொடுக்க வேண்டும். சீசனின் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்புவாய்ந்ததாக இருக்கும்.

அணியில் உள்ள அனைவருக்கும் அவரவர் பலம் தெரியும். மேலும் கேப்டன் பதவியைப் பெறுபவர், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வார். கூடுதல் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது அர்த்தமற்றது. ஏனென்றால் ஒவ்வொரு நபரும் அவரவர் வழியில் ஒரு தலைவர்தான். இந்திய அணியில், நாங்கள் பொதுவாக ஐபிஎல் பற்றிப் பேசுவதில்லை. எங்கள் கவனம் எப்போதும் தேசிய அணியின் இலக்குகளில் தான் இருக்கும். சில நேரங்களில் ஐபிஎல் விவாதங்கள் ஏலத்தைச் சுற்றி நடக்கும்” இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.